எம் பள்ளியின் சிறப்புகள் எங்களது பள்ளியானது செப்டம்பர் 1, 2018 முதல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு இந்த கல்வியாண்டு (2019-2020) முதல் 10 ஆம் வகுப்பு செயல்பட்டு வருகிறது. 1.கராத்தே: மாறிவரும் கால சூழ்நிலையில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் தருவது அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வண்ணமாக SSA மூலமாக ஒரு சிறப்பு கராத்தே ஆசிரியர் நியமிக்கப்பட்டு பெண் குழந்தைகளுக்கு கராத்தே வகுப்புகள் நடத்தப்பட்டு மாணவிகள் மாவட்ட அளவில் கலந்து கொண்டு பரிசுகளும் பெற்றனர். 2. அறிவியல் ஆய்வுகள்: பொதுவாக அறிவியல் என்பது நம் அன்றாட வாழ்வோடு ஒன்றியிருப்பது . நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அறிவியல் புதைந்துள்ளது. அறிவியலின் அடிப்படையை நுகர்ந்து பழகிவிட்டால், நுகர கற்றுக் கொடுத்துவிட்டால் ... இதோ சில விஞ்ஞானிகள்.....
மின்னூட்டமும், மின்னோட்டமும் 1) மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின் பாய்விற்கு காரணம்? நேர் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்கள் 2) பின்வருவனவற்றுள் பாதுகாப்பு கருவி அல்லாதது எது? கம்பி 3) மின்னோட்டத்தின் வெப்ப விளைவு _______ என அழைக்கப்படும். ஜீல் வெப்பமேறல் 4)இந்தியாவில் மாறு மின்னோட்டத்தின் அதிர்வெண்? 50 Hz 5) ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்? எலக்ட்ரான் இழப்பு 6) சீப்பினால் தலை முடியை கோதுவதனால்____ மின்னூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன (அ) மின்னூட்டங்கள் இடம்பெயர்கின்றன. 7) மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு? வேதி விளைவு 8) மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில் _______ எதிர் மின்னூட்டத்தில் ______ தொடங்கி; முடிவடையும் 9) ஒரு கம்பியின் மின் தடை எதைப் பொருத்து அமையும்? வெப்பநிலை, வடிவம், கம்பியின் இயல்பு 10) ஒம் விதி ? V = IR
Comments
Post a Comment